கிரிக்கெட்
அயர்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான ‘இந்திய அணியில் இருந்து ரஹானே நீக்கம் கடினமான முடிவு’ கங்குலி கருத்து

இங்கிலாந்தில் நடைபெறும் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
கொல்கத்தா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரஹானே, அயர்லாந்து 20 ஓவர் தொடர் மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவிக்கையில், ‘ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியில் இருந்து ரஹானே நீக்கம் செய்யப்பட்டது கடினமான முடிவாகும். நான் தேர்வாளராக இருந்தால் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக ரஹானேவை தான் தேர்வு செய்து இருப்பேன். அம்பத்தி ராயுடுவை விட இங்கிலாந்து சூழ்நிலையில் ரஹானே சிறப்பாக செயல்படக்கூடியவர். இங்கிலாந்து ஆடுகளங்களில் ரஹானே நல்ல சாதனை படைத்து இருக்கிறார்’ என்றார்.