கிரிக்கெட்
டெல்லி அணி வீரர் ரிஷாப் பான்ட் சதமும் அது நிகழ்த்திய சாதனைகளும்

டெல்லி அணி வீரர் ரிஷாப் பான்ட் சதமும் அது நிகழ்த்திய சாதனைகளும் வருமாறு

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 42–வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளும் மோதின.

இதில் டெல்லி அணி தோல்வி அடைந்தாலும் டெல்லி அணி வீரர் ரிஷாப் பான் டே அடித்த சதம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளார்.

*  ரிஷாப் பான்ட் ஐ.பி.எல். போட்டியில் எடுத்த முதலாவது சதம் இதுவாகும். அதேசமயம் நடப்பு சீசனில் அடிக்கப்பட்ட 3-வது சதம் இதுவாகும். ஏற்கனவே பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் (104 ரன்), சென்னை வீரர் ஷேன் வாட்சன் (106 ரன்) சதம் அடித்திருக்கிறார்கள்.

* ஐ.பி.எல். போட்டியில் சதம் கண்ட 2-வது இளம் வீரர் என்ற பெருமையை 20 வயதான ரிஷாப் பான்ட் பெற்றார். மனிஷ் பாண்டே தனது 19-வது வயதில் பெங்களூரு அணிக்காக சதம் அடித்திருந்தார்.

* ஐ.பி.எல். போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது. முதலாவது சதத்தை கொல்கத்தா அணிக்காக ஆடிய பிரன்டன் மெக்கல்லம் அடித்தார். இப்போது ரிஷாப் பான்ட் அடித்திருப்பது ஐ.பி.எல். வரலாற்றில் 50-வது சதமாக பதிவாகி இருக்கிறது.

* ஐ.பி.எல்.-ல் அதிகபட்ச ரன்களை பதிவு செய்த இந்தியர் என்ற சிறப்பையும் ரிஷாப் பான்ட் (15 பவுண்டரி, 7 சிக்சருடன் 128 ரன்) பெற்றார். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வீரர் முரளிவிஜய் 127 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

* ரிஷாப் பான்ட் 11 ஆட்டங்களில் 521 ரன்கள் குவித்துள்ளார். நடப்பு தொடரில் 500 ரன்களை கடந்த முதல் வீரர் ரிஷாப் பான்ட் தான்.

டெல்லி அணியின் ஸ்கோரில் 68.4% ரன்களை ரிஷாப் பான்டே எடுத்தார். ஐபிஎல்-லில் இது இரண்டாவது அதிகப் பங்களிப்பு. ஐபிஎல்-லின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அடித்த 222 ரன்களில் மெக்கல்லம் மட்டும் 158 ரன்கள் குவித்தார். அணியின் ஸ்கோரில் 71.7% ரன்கள். இதை இதுவரை யாராலும் தாண்டமுடியவில்லை.

* ஐபிஎல்-லில் நான்காவதாக அல்லது அதற்கும் கீழே களமிறங்கிய வீரர்களில் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு ராஜஸ்தானுக்கு எதிராக முதல் ஐபிஎல் போட்டியில் சிமண்ட்ஸ் 117* ரன்கள் எடுத்ததே அதிகமாக இருந்தது. அதை பான்ட் தாண்டியுள்ளார்.

* 20 வயதில் ( 20 வருடம் 218 நாள்கள்) ஐபிஎல் சதம் எடுத்துள்ளார் பான்ட். ஐபிஎல்-லில் சதமடித்த இரண்டாவது இளம் வீரர் இவர். இதற்கு முன்பு, 2009-ல் 19 வயதில் ( 19 வருடம் 253 நாள்கள்) பெங்களூர் வீரராக மணீஷ் பாண்டே டெக்கான் சார்ஜர்ஸுக்கு எதிராக 114 ரன்கள் எடுத்ததே இன்றும் சாதனையாக உள்ளது.

* இந்த ஐபிஎல்-லில் அனைவருக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் புவனேஸ்வர் குமார், ரஷித் கான் ஆகியோரின் பந்துவீச்சை பந்த் சிதறடித்தார். புவனேஸ்வரின் 11 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார் பந்த். புவனேஸ்வரின் பந்துவீச்சில் டி20 ஆட்டங்களில் வேறு யாரும் இந்தளவுக்கு ரன்கள் குவித்ததில்லை. ரஷித் கானின் 13 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார் பந்த். அதாவது இருவருடைய பந்துவீச்சுகளில் 24 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார் பான்ட்.

*  20 ஓவர் போட்டிகளில் இருமுறை மட்டுமே புவனேஸ்வர் குமார் 50 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார்.

* 4-0-55-2 vs பெங்களூர், 2016 (கடைசி 5 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார் சர்ஃபராஸ் கான்).

* 4-0-51-1 vs தில்லி, 2018 (கடைசி 5 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார் ரிஷாப் பான்ட்).

* 128 ரன்கள் எடுத்தாலும் ரிஷாப் பான்டின் டெல்லி அணி தோல்வியே அடைந்தது. தோல்வியில் அமைந்த ஐபிஎல் சதங்கள்:-

* 128* ரிஷப் பந்த்
* 117* சிமண்ட்ஸ்
* 115* சாஹா

 * 2016-ல் ஐபிஎல்-லில் 1000 ரன்கள் எடுத்த இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் சஞ்சு சாம்சன் (21 வருடம் 183 நாள்கள்). நேற்று, அதை முறியடித்து ஐபிஎல்-லில் 1000 ரன்கள் எடுத்த இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் ரிஷாப் பான்ட்  (20 வருடம் 218 நாள்கள்).

* ஐபிஎல் போட்டியில் சதமெடுத்த இந்தியர்கள் (13 பேர்):-

* மணீஷ் பாண்டே, யூசுப் பதான், முரளி விஜய், வல்தாட்டி, டெண்டுல்கர், சேவாக், ரஹானே, ரோஹித் சர்மா, ரெய்னா, சாஹா, கோலி, சாம்சன், ரிஷாப் பான்ட்.
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த  இந்தியர்கள்

128* - ரிஷப் பந்த் vs ஹைதராபாத், 2018
127 - முரளி விஜய் vs ராஜஸ்தான், 2010
126* - சுரேஷ் ரெய்னா vs பெங்கால், 2018

* 20 வயது பந்த், 521 ரன்களை இதுவரை எடுத்துள்ளார். 27 சிக்ஸர்கள்.

500+ ரன்கள் எடுத்த இளம் வீரர்.
25+ சிக்ஸர்கள் அடித்த இளம் வீரர்.

அதிக ரன்கள்: ரிஷாப் பான்ட்
அதிக பவுண்டரிகள்: ரிஷாப் பான்ட்
அதிக சிக்ஸர்கள்:ரிஷாப் பான்ட்  / தோனி
அதிகபட்ச ரன்கள்: ரிஷாப் பான்ட்