ஐபிஎல்: பிளே ஆப் சுற்றுக்கு 2 இடங்களுக்கு மல்லுக்கட்டும் 5 அணிகள்

ஐபிஎல் போட்டியின் பிளே ஆப் சுற்றுக்கு எஞ்சியுள்ள 2 இடங்களுக்கு முன்னேற 5 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. #IPLPlayOffsQualification

Update: 2018-05-15 08:33 GMT
புதுடெல்லி,

கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் முடிவடையும் நிலையில் அடுத்த கட்டமாக நடைபெறும் பிளே ஆப் சுற்றுக்கு எட்டு அணிகளில் நான்கு அணிகள் முன்னேறி செல்லும். ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் தகுதி பெற்ற நிலையில் எஞ்சியுள்ள 2 இடங்களுக்கு முன்னேற 5 அணிகள் வரிந்து கட்டி நிற்கின்றன.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விளையாடியுள்ள 12 ஆட்டங்களில் 6-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் அடைந்து 12 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் வகிக்கிறது. அதே போல் 12 புள்ளிகளை பெற்று ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் நான்கு, ஐந்தாம் இடத்தில் வகிக்கின்றன.

இந்நிலையில் மும்பை அணியும் 12 ஆட்டங்களில் 5-ல் வெற்றி மற்றும் 7-ல் தோல்வி அடைந்து 10 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் இடம் பெற்றுள்ளது. அடுத்த படியாக பெங்களூரு அணி 10 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் ஏழாம் இடம் வகிக்கிறது. 

இதனிடையே அடுத்து வரும் லீக் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலை உருவாகி இருப்பதால் ஐபிஎல் போட்டியின் அடுத்து வரும் ஒவ்வோடு லீக் சுற்று ஆட்டங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் எஞ்சியுள்ள 5 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெறும் 6 புள்ளிகளே பெற்றிருப்பதால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதியிழந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்