ஐபிஎல்: மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் தொடரில் 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. #IPL

Update: 2018-05-20 10:31 GMT
புதுடெல்லி,

ஐபிஎல் போட்டியின் லீக் சுற்றுகளில் கடைசி நாளான இன்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மோதுகின்றன. 

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 6 வெற்றி, 7 தோல்வி என 12 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த மோதலில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். தோற்றால் வெளியேறுவதை தவிர வழியில்லை. அது மட்டுமின்றி 2-3 அணிகள் 14 புள்ளிகளுடன் இருக்க வாய்ப்பு இருப்பதால் ரன்ரேட்டையும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். தொடரின் கடைசி பகுதியில் சிறப்பாக விளையாடி மீண்டுள்ள மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மாவும் (கடைசி 6 ஆட்டத்தில் 77 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்) பார்முக்கு திரும்பினால் அந்த அணி இன்னும் வலுவடையும்.

அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 வெற்றி, 9 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் கடைசி இடம் மாறுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் மும்பையின் கொண்டாட்டத்தை சீர்குலைத்து விடலாம். இதனிடையே மும்பை அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 


மேலும் செய்திகள்