மும்பை இந்த இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -பிரீத்தி ஜிந்தா

மும்பை நாக் அவுட் ஆனதை நினைத்து சந்தோஷப்பட்ட பிரீத்தி ஜிந்தா!!

Update: 2018-05-21 07:48 GMT
மும்பை

ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா ஆகிய மூன்று அணிகளும் பிளே ஆபிற்கு தகுதி பெற்ற நிலையில், நான்காவது இடத்தில் ராஜஸ்தான் இருந்தது. இந்நிலையில், கடைசி 2 லீக் போட்டிகள் நேற்று நடந்தன. மாலை 4 மணிக்கு டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லியை வீழ்த்தினால் ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளி மும்பை அணி, நெட் ரன் ரேட் அடிப்படையில், பிளே ஆபிற்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால் தோல்வியை தழுவியதால் தொடரை விட்டு வெளியேறியது.

இதையடுத்து இரவு 8 மணிக்கு சென்னையும் பஞ்சாப்பும் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 153 ரன்கள் எடுத்தது. 53 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியிருந்தால், ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளி பிளே ஆபிற்குள் பஞ்சாப் நுழைந்திருக்கலாம். ஆனால் பஞ்சாப் அணி தோல்வியை தழுவி, தொடரை விட்டு வெளியேறியது

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே, பஞ்சாப்பால் பிளே ஆஃபிற்குள் நுழைய முடியாது என்பது உறுதியாகிவிட்டது. இப்படியான சூழலில், அந்த போட்டியின்போது, பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா, பஞ்சாப் அணி தொடரை விட்டு வெளியேறப்போவதை நினைத்து வருத்தப்படாமல், மும்பை அணி தொடரைவிட்டு வெளியேறியதை நினைத்து மகிழ்ச்சியடைந்தார்.

சென்னை பஞ்சாப் போட்டியை பார்த்து கொண்டிருந்த பிரீத்தி ஜிந்தா, தனக்கு அருகில் இருந்தவரிடம், மும்பை அணி தொடரை வெளியேறியது மகிழ்ச்சியாக இருக்கிறது(I am very happy about mumbai are knocked out) என தெரிவித்தார்.

பிரீத்தி ஜிந்தாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்