பெண்கள் டி20 காட்சி கிரிக்கெட்- டிரைல்பிளேசர்ஸ் அணியை வீழ்த்தியது சூப்பர்நோவாஸ்

மும்பையில் நடந்த பெண்கள் டி20 காட்சி கிரிக்கெட் போட்டியில் டிரைல்பிளேசர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழத்தியது சூப்பர்நோவாஸ்.

Update: 2018-05-22 12:28 GMT

ஐபிஎல் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன் பெண்கள் டி20 கிரிக்கெட் ஆட்டம் ஒன்று நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. அதன்படி டிரைல்பிளேசர்ஸ் - சூப்பர்நோவாஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கியது.

சூப்பர்நோவாஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி டிரைல்பிளேசர்ஸ் அணியின் அலிஸ்சா ஹீலி, ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். ஹீலி 7 ரன்னிலும், மந்தனா 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த பெத் மூனே 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

சுஸி பேட்ஸ் 32 ரன்னும், தீப்தி ஷர்மா 21 ரன்னும், ரோட்ரிக்ஸ் 25 ரன்னும் சேர்க்க டிரைல்பிளேசர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.

பின்னர் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர்நோவாஸ் களமிறங்கியது. மிதலி ராஜ், டேனியல்லே வியாட் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். மிதலி ராஜ் 22 ரன்னிலும், வியாட் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த மேக் லேனிங் 16, ஹர்மன்ப்ரீத் கவுர் 21, ஷோபி டெவைன் 19 ரன்கள் அடிக்க சூப்பர்நோவாஸ் அணி பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்து 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்