ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆட்டத்தில் சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்கு

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் போட்டியில் சென்னை அணிக்கு 140 ரன்களை வெற்றி இலக்காக ஐதராபாத் நிர்ணயம் செய்து உள்ளது. #PlayOffs #SRHvCSK

Update: 2018-05-22 15:17 GMT
மும்பை,


11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பெற்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (16 புள்ளி), ராஜஸ்தான் ராயல்ஸ் (14 புள்ளி) ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறின. நடப்பு சாம்பியன் மும்பை, பெங்களூரு, பஞ்சாப், டெல்லி அணிகள் வெளியேற்றப்பட்டன.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை வகிக்கும் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்சும், சென்னை சூப்பர் கிங்சும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று கோதாவில் இறங்கி உள்ளது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. பந்துவீச்சில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் வரிசையாக 4 விக்கெட்களை வெறியேற்றியது. 6.4 வது ஓவரில் ஐதராபாத் அணி 50 ரன்கள் எடுத்து இருந்தது. இதனையடுத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட்களை எடுப்பதில் தீவிரம் காட்டியது. அதற்கு பலனும் கிடைத்தது. ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 139 ரன்களை எடுத்தது. இதனையடுத்து சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்