கிரிக்கெட்
டிவில்லியர்ஸ் ஓய்வு: முன்னாள் வீரர்கள் கருத்து

டிவில்லியர்சின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்துகள
சென்னை, டிவில்லியர்சின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்துகள் வருமாறு:–சச்சின் தெண்டுல்கர் (இந்தியா): களத்தில் சாதித்தது போல் வெளியேயும் 360 டிகிரி வெற்றிக்கு வாழ்த்துகள். நிச்சயம் உங்களை தவற விடுகிறோம்.ஷேவாக் (இந்தியா): வாழ்த்துகள் டிவில்லியர்ஸ். உலகில் அதிகமாக நேசித்த கிரிக்கெட் வீரர். நீங்கள் இல்லாத சர்வதேச கிரிக்கெட் களை இழக்கும்.அப்ரிடி (பாகிஸ்தான்): நான் போற்றும் மறக்க முடியாத விக்கெட்டுகளில் டிவில்லியர்சும் ஒருவர். பெரும்பாலான நேரங்களில் அவரது விக்கெட்டுகளை வீழ்த்துவது சவாலாக இருந்தது உண்டு. சாம்பியன் பேட்ஸ்மேன். அவரது புதுமையான ஷாட்டுகளை ரசித்து பார்த்து இருக்கிறேன்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.