கிரிக்கெட்
மோடிக்கு சவால் விடுத்த கோலி: கோலியின் சவாலை ஏற்ற மோடி

விராட் கோலி விடுத்த சவாலை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். #PMModi #ViratKohli
டெல்லி,

மத்திய விளையாட்டுத் துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ‘நாம் ஃபிட்டாக இருந்தால், இந்தியா ஃபிட்டாக மாறும் என்று சமூக வலைதளத்தின் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அதன்படி ஃபிட்னெஸ் சேலன்ஜ் (FitnessChallenge) என்ற ஹேஷ்டேக் மூலம், இந்தியர்கள் தங்களது உடற்பயிற்சி முயற்சிகளை சமூக வலைதளங்களில் வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் உடல் நலனை எப்படி பாதுகாப்பது குறித்தும், உடற்பயிற்சியின் அவசியத்தை குறித்தும் பேசி இருந்தார். மேலும் அவர் தனது ஃபிட்னெஸ் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

மேலும், தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி, தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு தன்னை போல் பண்ண முடியுமா எனவும் 'பிட்னெஸ் சேலஞ்ச்' சவால் விடுத்துள்ளார். இதனையடுத்து டுவிட்டரில் விராட் கோலிக்கு பதிலளித்துள்ள மோடி உங்களின் சவாலை ஏற்றுக்கொண்டேன், விரைவில் என் உடற்பயிற்சி வீடியோவை வெளியிடுவேன் என மோடி தெரிவித்துள்ளார்.


I have accepted the #FitnessChallenge by @ra_THORe sir. Now I would like to challenge my wife @AnushkaSharma , our PM @narendramodi ji and @msdhoni Bhai for the same. 😀 #HumFitTohIndiaFit#ComeOutAndPlaypic.twitter.com/e9BAToE6bg — Virat Kohli (@imVkohli) May 23, 2018Challenge accepted, Virat! I will be sharing my own #FitnessChallenge video soon. @imVkohli#HumFitTohIndiaFithttps://t.co/qdc1JabCYb — Narendra Modi (@narendramodi) May 24, 2018