இங்கிலாந்து டெஸ்டிலிருந்து காயம் காரணமாக பாபர் ஆசாம் நாடு திரும்பினாா்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக பாபர் ஆசாம் தொடரில் இருந்து வெளியேறியுள்ளாா். #BabarAzam #Injury #BenStokes

Update: 2018-05-26 07:38 GMT
இங்கிலாந்து, 

பாகிஸ்தான் கிாிக்கெட் அணி, இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த  டெஸ்ட் போட்டி லண்டனில் கடந்த 24ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் விளையாடிய  இங்கிலாந்து அணி  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 184 ரன்களை எடுத்திருந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, முகமது அப்பாஸ் ஆகியோாின்  சிறப்பான பந்து வீச்சில் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்திருந்தனா்.

பின்னா் களமிறங்கிய பாகிஸ்தான் அணி  நேற்றை ஆட்டத்தின் முடிவில் மட்டும் 8 விக்கெட்டுகளை பறிக்கொடுத்து 350 ரன்களை சோ்த்திருந்தது. அப்போது, பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் 68 ரன்கள் எடுத்து விளையாடிக் கொடிருந்தாா். இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டா் பென் டோக்ஸ் வீசிய பந்து பாபா் ஆசாம்  முழங்கையை பதம் பாா்த்தது.  இதனால் அவருக்கு பலமாகத் தாக்கி பலத்த காயம ஏற்பட்டது.

இந்நிலையில் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.  பின்னா் அவருக்கு எலும்பு மறிவு ஏற்பட்டு இருப்பது  கண்டறிப்பட்டது. இதனால் இந்த தொடாில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ளாா். 

மேலும் செய்திகள்