ஆடுகளத்தன்மையை மாற்றி சூதாட்டமா? ஐ.சி.சி. விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறது, இந்திய கிரிக்கெட் வாரியம்

அல் ஜஸீரா செய்தி நிறுவனம் சில டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ‘பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்திருப்பதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டது.

Update: 2018-05-27 20:45 GMT

புதுடெல்லி, 

அல் ஜஸீரா செய்தி நிறுவனம் சில டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ‘பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்திருப்பதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. இந்தியா–இலங்கை (காலே, ஜூலை, 2017–ம்ஆண்டு), இந்தியா–ஆஸ்திரேலியா( ராஞ்சி, மார்ச், 2017), இந்தியா–இங்கிலாந்து (சென்னை, டிசம்பர், 2016) ஆகிய டெஸ்ட் போட்டிகளின் போது ஆடுகள பராமரிப்பாளரை சூதாட்டதரகர்கள் அணுகி தங்களுக்கு ஏற்ப ஆடுகளத் தன்மையை மாற்றி சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், தங்களது ரகசிய ஆபரே‌ஷனில் இந்த வி‌ஷயங்கள் தெரிய வந்திருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் சில ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது. மும்பை முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் மோரிஸ், ஆடுகளத்தன்மையை மாற்றுவதற்கான வேலையை செய்ததாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விசாரணையை தொடங்கியுள்ளது. ஐ.சி.சி.யின் விசாரணை முடிவை பொறுத்தே தங்களது நடவடிக்கை அமையும் என்றும் அதுவரை காத்திருப்போம் என்றும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் கூறியுள்ளன.

மேலும் செய்திகள்