கிரிக்கெட்
ஐ.பி.எல். கோப்பை: சென்னை மக்களுக்கு சமர்ப்பணம் - சி.எஸ்.கே. அணி வீரர் ஹர்பஜன் சிங் ட்வீட்

தங்களது வெற்றி குறித்து சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் தமிழில் டுவிட் செய்துள்ளார்
சென்னை 

ஐபிஎல் கிரிக்கெட் 2018 இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இது குறித்து ஹர்பஜன் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:- பல காயங்களுக்கு ஆறுதலாக இந்த கோப்பையை மக்களுக்கு சமர்ப்பணம் செயகின்றோம். காரியம் கை கைக்கூடியது.உங்கள் பாசத்திற்கும்! நேசத்திற்கும்! தலைவணங்குகின்றேன்.தாய் போல் எமை சீராட்டிய தமிழ்நாடு வாழியவே.அனைத்து துன்பங்களையும் மறந்து எங்கள் தோளோடு தோள் நின்றமைக்கு நன்றி பல காயங்களுக்கு ஆறுதலாக இந்த @ipl கோப்பையை @ChennaiIPL மக்களுக்கு சமர்ப்பணம் செயகின்றோம். காரியம் கை கைக்கூடியது.உங்கள் பாசத்திற்கும்! நேசத்திற்கும்! தலைவணங்குகின்றேன்.தாய் போல் எமை சீராட்டிய தமிழ்நாடு வாழியவே.அனைத்து துன்பங்களையும் மறந்து எங்கள் தோளோடு தோள் நின்றமைக்கு #நன்றிpic.twitter.com/QirAlvsRcc — Harbhajan Turbanator (@harbhajan_singh) May 28, 2018 தோட்டாவென கிளம்பிய பந்துகள்.கண்ணில் நீருடன் குருதியில் மஞ்சளேந்தி @IPL கோப்பையை வென்றோம்.எமை அடித்து,அழுத்தி ஆட(ள)முற்பட்டபோதும் மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி் கடந்து போராடி கிடைத்த வெற்றி @chennaiipl மக்களுக்கு சமர்ப்பணம்.மக்களை வென்றதே நமது வெற்றி. சுட்டாலும் சங்கு வெண்மையே #நன்றி என்றார்.தற்போது இந்த செய்தி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றது. தோட்டாவென கிளம்பிய பந்துகள்.கண்ணில் நீருடன் குருதியில் மஞ்சளேந்தி @IPL கோப்பையை வென்றோம்.எமை அடித்து,அழுத்தி ஆட(ள)முற்பட்டபோதும் மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி் கடந்து போராடி கிடைத்த வெற்றி @chennaiipl மக்களுக்கு சமர்ப்பணம்.மக்களை வென்றதே நமது வெற்றி.சுட்டாலும் சங்கு வெண்மையே#நன்றிpic.twitter.com/OnATPBSn3G — Harbhajan Turbanator (@harbhajan_singh) 27 May 2018