கிரிக்கெட்
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ் சேர்ப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
லீட்ஸ்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே லார்ட்சில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதலாவது டெஸ்டில் மோசமாக ஆடிய மார்க் ஸ்டோன்மேன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக 25 வயதான பேட்ஸ்மேன் ஜென்னிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.