கிரிக்கெட்
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - இங்கிலாந்து அணி முன்னிலை

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.
லீட்ஸ்,

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 48.1 ஓவர்களில் 174 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. மழை காரணமாக மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தான் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 80 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்று இருந்தது.