கிரிக்கெட்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய செயல் அதிகாரி சுதர்லாண்ட் ராஜினாமா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த ஜேம்ஸ் சுதர்லாண்ட் அந்த பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென நேற்று அறிவித்தார்.
மெல்போர்ன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த ஜேம்ஸ் சுதர்லாண்ட் அந்த பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென நேற்று அறிவித்தார். இது குறித்து ஜேம்ஸ் சுதர்லாண்ட் கூறுகையில், ‘கடந்த 20 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய பதவியில் இருந்துள்ளேன். பதவியில் இருந்து விலக இது சரியான தருணம் என்று கருதுகிறேன். நான் பதவி விலகுவதற்கு சவுகரியமான நேரமாக இதனை நினைக்கிறேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கும் இது நல்ல நேரமாகும். கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் வீரர்கள் ஒப்பந்தம் உள்பட பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே புதிய தலைமை செயல் அதிகாரியிடம் பொறுப்புகளை ஒப்படைக்க இது சரியான நேரமாகும். ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்கும், எனது விலகல் முடிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது’ என்று தெரிவித்தார். புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படும் வரை ஜேம்ஸ் சுதர்லாண்ட் இந்த பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான்–ஹாங்காங் இன்று மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ள பாகிஸ்தான் அணி, ஹாங்காங்கை இன்று எதிர்கொள்கிறது.
2. மொயீன் அலியை ‘ஒசாமா’ என்று ஆஸ்திரேலிய வீரர் விமர்சித்ததாக புகார் கிரிக்கெட் வாரியம் விசாரணை
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலியை, ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒசாமா என்று விமர்சித்ததாக புகார் எழுந்துள்ளது.
3. ‘சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் திட்டம் இல்லை’ இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் பேட்டி
‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை’ என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார்.
4. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு இங்கிலாந்து அணி 4–வது இடத்துக்கு முன்னேற்றம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை இழந்தாலும் இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறது. தொடரை வென்ற இங்கிலாந்து அணி 4–வது இடத்துக்கு முன்னேறியது.
5. ஆசிய கோப்பை கிரிக்கெட்: ‘இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் முக்கியமானது’ பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பேட்டி
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் முக்கியமானது என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறினார்.