கிரிக்கெட்
சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை பெறுகிறார் விராட் கோலி

சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதுக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். #ViratKohli
பெங்களூரு,

இந்தியாவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு (சீனியர் மற்றும் ஜூனியர்) இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆணடுக்கான விருதுகள் பெறும் வீரர்களை, பி.சி.சி.ஐ. விருது கமிட்டி தேர்வு செய்து அறிவித்து உள்ளது.

இதில், சீனியர் பிரிவில் சிறந்த ஆட்டக்காரர்களுக்கு வழங்கும் மதிப்புமிக்க விருதான பாலி உம்ரிகர் விருதினை கேப்டன் விராட் கோலி பெறுகிறார். 2016-2017,2017-2018 ஆண்டுகளில் சிறந்த சர்வதேச வீரர் என்ற வகையில் விராட் கோலியை இந்த விருதை பெற உள்ளார். 

பெங்களூருவில் வரும் செவ்வாய்க்கிழமை இந்த விருது வழங்கப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்து உள்ளது. மகளிர் பிரிவில், ஹர்மன் பிரீத் கவுர் மற்றும் ஸ்மிரிதி மந்தனா ஆகிய இருவரும் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான (2016-2017,2017-2018) பிரிவில் விருதை பெற உள்ளனர்.