கிரிக்கெட்
19-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்: இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அட்டவணை வெளியீடு

19-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அட்டவணை வெளியிடபட்டு உள்ளது.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய யு-19 அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. 

இரண்டு நான்கு நாள் போட்டி மற்றும் ஐந்து ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில், அடுத்த மாதம் இலங்கைக்கு எதிராக இந்திய யு-19 அணி விளையாட இருக்கிறது. இதற்காக வருகிற ஜூலை 10ம் தேதி கொழும்புக்கு இந்திய அணி செல்கிறது. போட்டிக்கு முன்பு இந்தியா - இலங்கை அணிகள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கின்றன. இந்திய யு-19 அணியில், சச்சின் மகன் ஆல்-ரவுண்டர் அர்ஜுன் தெண்டுல்கர் இடம் பெற்றிருப்பது, இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. 

இந்தியா பங்கேற்கும் இரண்டு நான்கு நாள் போட்டியில், முதல் ஆட்டம் கட்டுநாயகேவில் உள்ள சிலாவ் மரியான்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி ஹம்பன்டோட்டாவின் மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. 

ஒருநாள் தொடரில், முதல் போட்டி பி.சாரா ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகள் சின்ஹாலேஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்திலும், கடைசி இரு போட்டிகளும் மொறட்டுவாவில் உள்ள டி சொய்சா மைதானத்திலும் நடக்க உள்ளது. 

முன்னதாக இந்த வாரம் இலங்கை கிரிக்கெட் வாரியம், முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஹாசன் திலகரத்னேவை யு-19 அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்திருந்தது. 

இந்தியா - இலங்கை அட்டவணை:

ஜூலை 12-13 - இரண்டு நாள் பயிற்சி ஆட்டம்

ஜூலை 16-19 - முதல் நான்கு நாள் ஆட்டம், கட்டுநாயகே

ஜூலை 23-26 - இரண்டாவது நான்கு நாள் ஆட்டம், ஹம்பன்டோட்டா

ஜூலை -29 - முதல் ஒருநாள் போட்டி, பி.சாரா ஓவல்

ஆகஸ்ட் 1 - இரண்டாவது ஒருநாள் போட்டி, கொழும்பு

ஆகஸ்ட் 4 - மூன்றாவது ஒருநாள் போட்டி, கொழும்பு

ஆகஸ்ட் 6 - நான்காவது ஒருநாள் போட்டி, மொறட்டுவா

ஆகஸ்ட் 9 - ஐந்தாவது ஒருநாள் போட்டி, மொறட்டுவா