கிரிக்கெட்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 414 ரன்கள் குவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப்–ஸ்பெயினில் நடந்து வருகிறது.
போர்ட் ஆப்–ஸ்பெயின், வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப்–ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்க நாளில் 6 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. 2–வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. விக்கெட் கீப்பர் ஷேன் டாவ்ரிச் 125 ரன்களுடன் (325 பந்து, 12 பவுண்டரி) களத்தில் இருந்தார். இலங்கைக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஒருவர் சதம் அடித்தது இதுவே முதல் முறையாகும். கேப்டன் ஜாசன் ஹோல்டர், பிஷூ தலா 40 ரன்கள் எடுத்தனர்.அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி ஆட்ட நேர இறுதியில் 3 விக்கெட்டுக்கு 31 ரன்களுடன் தடுமாறிக்கொண்டிருந்தது.