‘இந்தியாவை விட எங்களிடமே சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்’ ஆப்கானிஸ்தான் கேப்டன் சொல்கிறார்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களது முதலாவது டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் மோத உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி வருகிற 14–ந்தேதி பெங்களூருவில் தொடங்குகிறது.

Update: 2018-06-09 21:00 GMT

பெங்களூரு, 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களது முதலாவது டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் மோத உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி வருகிற 14–ந்தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகி வரும் ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஸ்டானிக்ஜாய் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

எங்களிடம் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதை கிரிக்கெட் உலகம் அறியும். ரஷித்கான், முஜீப் ரகுமான், முகமது நபி, ரமத் ஷா, ஜாஹிர் கான் போன்ற திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ளனர். ரஷித்கான் இப்போது சுழற்பந்து வீச்சில் ‘நம்பர் ஒன்’ என்பதை யாரும் மறுக்க முடியாது. ரஷித்கான், முகமது நபி உள்ளிட்டோரை பின்பற்றி எங்கள் நாட்டில் நிறைய சுழற்பந்து வீச்சாளர்கள் உருவாகி வருவது நல்ல வி‌ஷயமாகும். இந்தியாவை விட எங்களிடமே சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதாக கருதுகிறேன். நிச்சயம் இந்திய அணிக்கு கடும் சவால் கொடுப்போம். இது சிறந்த போட்டியாக இருக்கும்.

இவ்வாறு ஸ்டானிக்ஜாய் கூறினார்.

மேலும் செய்திகள்