பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னர் புதிய அவதாரம்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னர் வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுக்க உள்ளார்.

Update: 2018-06-11 06:52 GMT
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடரில் வர்ணனையாளராக செயல்பட உள்ளார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால் ஆஸ்திரேலிய வீரர்களான வார்னர், ஸ்மித், பான்கிராஃப்ட் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கரும், அணித்தலைவராக டிம் பெய்னும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளன.

இந்த தொடரின் 2வது போட்டியில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னர் வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.இந்தப் போட்டி கார்டிஃபில் ஜூன் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன் பின்னர், ஜூன் 28ஆம் தேதி கனடாவில் நடைபெறும் குளோபல்  20 ஓவர்  அணியுடன் வார்னர் இணைய உள்ளார். ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் தேர்வு ஆவது கடினம் என்று டேவிட் வார்னர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வர்ணனையாளராக செயல்பட உள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்