கிரிக்கெட்
சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட வார்னர் ஒப்பந்தம்

சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட வார்னர் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
செயின்ட்லூசியா,

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. இருப்பினும் கிரிக்கெட் ஆட்டத்திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கிளப், லீக் வகையிலான போட்டிகளில் மட்டும் விளையாட அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீசில் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் கரிபீயன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிக்காக ஆட வார்னர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.