கிரிக்கெட்
இங்கிலாந்து அணியில் இருந்து கிறிஸ்வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் நீக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.
டிரென்ட்பிரிட்ஜ்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இரு அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரென்ட் பிரிட்ஜில் இன்று நடக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து இருந்த கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் காயம் குணமடையாததால் எஞ்சிய 3 ஆட்டங்களுக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் உடல் தகுதி பெற்று விட்டதால் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.