இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: தென்ஆப்பிரிக்க அணியில் இம்ரான் தாஹிருக்கு ஓய்வு

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் (ஜூலை) 29-ந் தேதி முதல் ஆகஸ்டு 12-ந் தேதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது.

Update: 2018-06-18 21:15 GMT
கேப்டவுன், 

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் (ஜூலை) 29-ந் தேதி முதல் ஆகஸ்டு 12-ந் தேதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிருக்கு இந்த போட்டி தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் தப்ரைஸ் ஷம்சி, கேசவ் மகராஜ் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் ஜூனியர் டாலா, பேட்ஸ்மேன் ரீஜா ஹென்ரிக்ஸ் ஆகியோர் புதுமுக வீரர்களாக அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆல்-ரவுண்டர் வான் முல்டெர் அணிக்கு திரும்பி இருக்கிறார். காயம் அடைந்த கிறிஸ் மோரிஸ் அணியில் இடம் பெறவில்லை.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி வருமாறு:-

பாப் டுபிளிஸ்சிஸ் (கேப்டன்), ஹசிம் அம்லா, ஜூனியர் டாலா, குயின்டான் டி காக், டுமினி, ரீஜா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், மார்க்ராம், டேவிட் மில்லர், வான் முல்டெர், நிகிடி, பெலக்வாயோ, ரபடா, தப்ரைஸ் ஷம்சி.

மேலும் செய்திகள்