இலங்கை–வெஸ்ட் இண்டீஸ் 2–வது டெஸ்ட் ‘டிரா’

இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்தது.

Update: 2018-06-19 20:30 GMT

செயின்ட் லூசியா, 

இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 253 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 300 ரன்களும் எடுத்தன. 47 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 342 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 295 ரன்கள் இலக்கை நோக்கி கடைசி நாளில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது. அந்த அணி 60.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ‘டிரா’வில் முடித்துக் கொள்ளப்பட்டது. கிரேக் பிராத்வெய்ட் 59 ரன்களுடன் களத்தில் இருந்தார். மழை குறுக்கிட்டதால் கடைசி நாளில் 32.3 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது. இல்லாவிட்டால் இந்த போட்டியில் முடிவு கிடைத்திருக்கும். இரு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 121 ரன்கள் விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுகளை அள்ளிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ‌ஷனோன் கேப்ரியல், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சிறந்த பந்து வீச்சு சாதனையை பதிவு செய்ததுடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 23–ந்தேதி பிரிஜ்டவுனில் தொடங்குகிறது.

மேலும் செய்திகள்