கிரிக்கெட்
இலங்கைக்கு எதிரான பகல்–இரவு டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் டாவ்ரிச் அரைசதம்

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் (பகல்–இரவு டெஸ்ட்) மழை பாதிப்புக்கு மத்தியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் 46.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.
பிரிட்ஜ்டவுன், பிரிட்ஜ்டவுனில் நேற்று முன்தினம் தொடங்கிய இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் (பகல்–இரவு டெஸ்ட்) மழை பாதிப்புக்கு மத்தியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் 46.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. அரைசதம் அடித்த விக்கெட் கீப்பர் டாவ்ரிச் 60 ரன்களுடனும், கேப்டன் ஹோல்டர் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.