சர்வதேச 20- ஓவர் போட்டிகளில் விரைவாக 2000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை

சர்வதேச 20- ஓவர் போட்டிகளில் விரைவாக 2000 ரன்களை கடந்து விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். #ViratKohli

Update: 2018-07-04 01:50 GMT
மான்செஸ்டர், 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் துவக்கத்தில், இந்திய அணி 3- இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், முதல் 20-ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முன்னதாக,  இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 9 ரன்களை எடுத்தபோது இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். டி-20 போட்டிகளில்  இரண்டாயிரம் ரன்களை கடந்த நான்காவது வீரர் விராட் கோலி ஆவார். அதேவேளையில், விரைவாக 2000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். விராட் கோலி, 56 போட்டிகளில்  இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக  மெக்கல்லம் 66 போட்டிகளிலும், கப்தில் 68 போட்டிகளிலும், சோயப் மாலிக் 92 போட்டிகளிலும் இரண்டாயிரம் ரன்களை கடந்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்