கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி 148 ரன்கள் சேர்ப்பு

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்றிரவு நடந்தது.
கார்டிப், இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்றிரவு நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா (5 ரன்), ஷிகர் தவான் (10 ரன்) மற்றும் லோகேஷ் ராகுல் (6 ரன்) ஏமாற்றிய நிலையில், கேப்டன் விராட் கோலி (47 ரன், 38 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), விக்கெட் கீப்பர் டோனி (32 ரன், 24 பந்து, 5 பவுண்டரி), சுரேஷ் ரெய்னா (27 ரன், 20 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோர் கணிசமான பங்களிப்பை அளித்து சவாலான ஸ்கோரை எட்ட வழிவகுத்தனர்.அடுத்து 149 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 12 ஓவர் முடிந்திருந்த போது 3 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது.