கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ‌ஷர்துல் தாகூர் சேர்ப்பு

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு அயர்லாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது பீல்டிங் செய்கையில் இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது.
மும்பை, இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு அயர்லாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது பீல்டிங் செய்கையில் இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடவில்லை. அவருக்கு இங்கிலாந்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலகி நாடு திரும்புகிறார். இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக மும்பையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ‌ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். 26 வயதான ‌ஷர்துல் தாகூர் 3 ஒருநாள் மற்றும் ஏழு 20 ஓவர் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்.