கிரிக்கெட்
வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

வங்காள தேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆன்டிகுவா

வங்காள தேச கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, ஆன்டிகுவா நகரில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்து வந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆட்டத்தை தொடங்கிய வங்காள தேசம்  முதல் இன்னிங்ஸில் 18.4 ஓவர்களில் வெறும் 43 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 406 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெயிட் அபார சதமடித்தார். அவர் 121 ரன்களும் சாய் ஹோப் 67 ரன்களும், டிவோன் ஸ்மித் 58 ரன்களும் எடுத்தனர். பங்களாதேஷ் தரப்பில் அறிமுக வீரர் அபு ஜெயத், மெஹிடி தலா 3 விக்கெட்டுகளையும் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்காள தேச அணி, வெஸ்ட் இண்டீஸின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை மளமளவென இழந்தது. அந்த அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 18 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது. மகமத்துல்லா 15 ரன்களுடனும் நுருல் ஹசன் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டத்தில்  மகமத்துல்லா மேலும் ரன் ஏதும் சேர்க்காமல் அவுட் ஆனார். நுருல் ஹசன் தாக்குப் பிடித்து 64 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்தவர்கள் நிலையாக நிற்காததால், 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது . இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் வரலாம் -உளவுத்துறை
ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 உலக உளவுத்துறை நிறுவனக்கள் கண்காணித்து வருகின்றன.
2. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மகன், மருமகன் சேர்ப்பு தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் மீது குற்றச்சாட்டு
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் மீது கூறப்பட்ட புகாரை அவர் நிராகரித்துள்ளார்.
3. நெற்றியில் குங்குமம் - சுடிதார் துப்பட்டா அணிந்து பெண் வேடத்தில் கிரிக்கெட் வீரர் கம்பீர்
சுடிதார் துப்பட்டா அணிந்து குங்குமம் வைத்து இருக்கும் கிரிக்கெட் வீரர் கம்பீரின் புகைப்படம் வைரலாகி உள்ளது.
4. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த போதும் தரவரிசையில் இந்திய அணி முதலிடம்
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த போதும் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
5. இந்திய கிரிக்கெட்டில் அதிக சம்பளம் வாங்குவது யார்?
இந்திய கிரிக்கெட்டில் அதிக சம்பளம் வாங்குவது யார் தெரியுமா என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.