இலங்கை-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

Update: 2018-07-11 22:05 GMT
காலே, 

பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேவில் இன்று தொடங்குகிறது.

தென்ஆப்பிரிக்க அணியில், காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் 6 மாதத்திற்கு பிறகு திரும்பியிருக்கிறார். அவர் இன்னும் 3 விக்கெட் எடுத்தால் தென்ஆப்பிரிக்க பவுலர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைப்பார். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் அதை திறம்பட எதிர்கொள்வது தான் பிளிஸ்சிஸ், அம்லா, டீன் எல்கர், மார்க்ராம், குயின்டான் டி காக் உள்ளிட்ட தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சவாலான விஷயமாக இருக்கும்.

இலங்கை அணியில் கேப்டன் சன்டிமால் பந்தை சேதப்படுத்திய ஒழுங்கீன பிரச்சினையில் சிக்கியிருப்பதால் அவர் இந்த டெஸ்டில் ஆடுவாரா? என்பதில் உறுதி கிடையாது. அவர் இடம்பெறாவிட்டால் லக்மல் அணியை வழிநடத்துவார். விரலில் ஏற்பட்ட காயம் குணமடைந்து விட்டதால் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த டெஸ்ட் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்