கிரிக்கெட்
6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் புதிய சாதனை படைத்த குல்தீப் யாதவ்

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் புதிய சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார். #KuldeepYadav
நாட்டிங்ஹாம், 

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியிருந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று நாட்டிங்காமில் நடைபெற்றது. 

இப்போட்டியில், இந்திய அணியின் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் பெற்றுள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீர பிராட் ஹாக் 32 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது.