கிரிக்கெட்
முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் அரை மராத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்

மும்பையில் மராத்தான் ஓட்ட போட்டியை முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் வருகிற 22ந்தேதி தொடங்கி வைக்கிறார்.
மும்பை,மும்பையில் கனேகியா பருவகால மராத்தான் சவால் என்ற பெயரில் மராத்தான் ஓட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.  5 கி.மீட்டர், 10 கி.மீட்டர் மற்றும் 21 கி.மீட்டர்கள் என 3 பிரிவுகளாக இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.  இதில் 21 கி.மீட்டர் தொலைவு என்பது அரை மராத்தான் போட்டியாக நடைபெறும்.5 கி.மீட்டர் போட்டியில் 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள முடியும்.  10 மற்றும் 21 கி.மீட்டர் போட்டிகளில் 18 வயது பூர்த்தியானவர்கள் கலந்து கொள்ளலாம்.இதற்காக 3 ஆயிரத்து 500க்கும் கூடுதலான பேர் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.  இவற்றில் 500 பேர் அரை மராத்தான் போட்டியில் பங்கேற்கின்றனர்.இந்த 3 பிரிவுகளுக்கும் மொத்தம் ரூ.2 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுகிறது.  போட்டியில் பங்கேற்பவர்களுக்கு டி சர்ட், மெடல், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.  குடிநீர் மற்றும் நொறுக்கு தீனிகள் ஆகியவையும் வழங்கப்படும்.  இந்த போட்டிகளை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் வருகிற 22ந்தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.