ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெறுகிறாரா?

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான டோனி 2–வது ஆட்டத்தில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசி ஆட்டத்தில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார்.

Update: 2018-07-18 22:00 GMT

புதுடெல்லி, 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான டோனி 2–வது ஆட்டத்தில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசி ஆட்டத்தில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார். டோனியின் நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. லீட்சில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது. தோல்வி கண்டு வீரர்கள் அனைவரும் பெவிலியன் திரும்பிய போது டோனி, நடுவரிடம் இருந்து ஒரு பந்தை கேட்டு வாங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக போட்டி தொடரை வென்றாலோ? அல்லது சிறப்பாக பந்து வீசினாலோ வீரர்கள் ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்லுவார்கள். தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரோ? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. 37 வயதான டோனி 2014–ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

மேலும் செய்திகள்