கிரிக்கெட்
டி.என்.பி.எல்: கோவை அணி வெற்றி பெற 125 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி வாரியர்ஸ் அணி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் கோவை அணி வெற்றி பெற 125 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி வாரியர்ஸ் அணி. #TNPL
நத்தம்,

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி, திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி  திருச்சி வாரியர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பரத் சங்கர், கேப்டன் பாபா இந்த்ரஜித் ஆகியோர் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 24 ஆக இருக்கும் போது அஜித் ராம் பந்து வீச்சில், இந்திரஜித் போல்ட் ஆகி வெளியேற அடுத்ததாக மணி பாரதி களத்தில் நுழைந்தார். 

இதனிடையே கோவை கிங்ஸ் அணியின் திறமையான பந்து வீச்சினால் ரன் குவிக்க தவறிய திருச்சி வாரியர்ஸ் அணி விக்கெட்டுகளையும் பறி கொடுத்த வண்ணமிருந்தது. திருச்சி அணியின் சுரேஷ் குமாரை  (35 ரன்கள்) தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோவை கிங்ஸ் அணி தரப்பில் அஜித் ராம், மணிகண்டன் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், ப்ரசாத் ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.