பாலியல் குற்றச்சாட்டு: கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா அப்பாவி - இலங்கை போலீசார்

பாலியல் குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா அப்பாவி என இலங்கை போலீசார் தெரிவித்து உள்ளனர். #DanushkaGunathilaka

Update: 2018-07-24 12:15 GMT
கொழும்பு

இலங்கையில் நடந்த நிதாஹஸ் டிராபி முத்தரப்பு தொடரில் வங்கதேச வீரர் தமீம் இக்பாலிடம் இலங்கை வீரர் குணதிலகா ஒழுங்கீனமாக நடந்ததாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக அவர் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிவித்தது. ஆனால் எந்தமாதிரியான ஒழுங்கீன செயல்கள் என குறிப்பிடப்படவில்லை.

வீரர்கள் தங்கும் அறையில் வெளிநபர்கள் தங்கக்கூடாது என்பது விதி. அப்படியிருக்கையில், குணதிலகாவின் அறையில் அவரது நண்பர், நார்வே பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகாரின் பேரில் குணதிலகாவின் நண்பர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த சம்பவம் நடந்தபோது குணதிலகாவும் அந்த ஓட்டலில் இருந்ததால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் அந்த அணியின் ஸ்பின் பவுலர் நைட் கிளப் சென்றுவிட்டு தாமதமாக வந்ததால், அவருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. இந்நிலையில், குணதிலகாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்  கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு எதிராக  எந்தவொரு விசாரணையும் போலீசார் மேற்கொள்ளவில்லை  என இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும் இலங்கை கிரிக்கேட் வாரியம்  'வீரர் நடத்தை விதிமுறைகளை' மீறியதற்காக அவரை விசாரணை செய்ய முடியும்.

நார்வே பெண்  பாலியல் பலாத்கார புகார் தொடர்பாக  ஒருவர் கைது  செய்யப்பட்டு உள்ளார். ஆனால் அவர் குணதிலகா மீது எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. 

மேலும் செய்திகள்