‘கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை வேதனை அளித்தது’ - ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஆதங்கம்

கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை வேதனை அளித்ததாக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

Update: 2018-07-24 22:00 GMT
சிட்னி,

கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் நடந்துள்ளது. 2017-ம் ஆண்டில் ராஞ்சியில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் 2 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என்று அல்ஜஜீரா சேனல் சமீபத்தில் பரபரப்பான புலனாய்வு வீடியோ செய்தியை வெளியிட்டது. ஆனால் அந்த செய்தியில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. இதில் மேக்ஸ்வெல்லுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் கிளம்பியது.

இந்த சர்ச்சை குறித்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் கருத்து தெரிவிக்கையில், ‘ஆஸ்திரேலிய அணி ஆடிய போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ நடந்தது என்று வெளியான செய்தி எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளித்தது. அந்த போட்டியில் நான் முதல் சதம் அடித்தது மறக்க முடியாத நெகிழ்ச்சியான தருணமாகும். சதம் அடித்ததும் ஸ்டீவன் சுமித்துடன் நான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது இன்னும் என் மனதில் நிலைத்து நிற்கிறது. எனது முதல் டெஸ்ட் சதத்தின் நினைவை அழிக்கும் மோசமான முயற்சியாகவே இதனை நான் நினைக்கிறேன். அந்த சூதாட்ட குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் கிடையாது. கிரிக்கெட் ஆட்டத்திற்கு எதிராக நான் ஒருபோதும் எதுவும் செய்ததில்லை’ என்றார்.

மேலும் செய்திகள்