கிரிக்கெட்
‘ஆடுகளம் குறித்து புகார் கூறமாட்டோம்’ - ரவிசாஸ்திரி

ஆடுகளம் குறித்து புகார் கூறமாட்டோம் என ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
செம்ஸ்போர்டு,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நேற்று அளித்த பேட்டியில், ‘எனது கொள்கை மிக எளிதானது. உங்கள் நாட்டில் நாங்கள் உங்கள் ஆடுகளத்தை (பிட்ச்) குறித்து கேள்வி எதுவும் எழுப்பமாட்டோம். அதே போல் எங்கள் நாட்டில் பிட்ச் குறித்து நீங்களும் எதுவும் கேட்காதீர்கள். இந்த சுற்றுப்பயணத்தில் சீதோஷ்ண நிலை, பிட்ச் உள்ளிட்டவை மீது பழியை போட்டு சாக்குபோக்கு எதுவும் ஒரு போதும் சொல்லமாட்டோம். இங்கிலாந்தை வீழ்த்துவதே எங்கள் முன் உள்ள சவாலாகும்’ என்றார்.