20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

வங்காளதேசம் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் பாசட்டெரேயில் நடந்தது.

Update: 2018-08-01 21:30 GMT

பாசட்டெரே,

வங்காளதேசம் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் பாசட்டெரேயில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மக்முதுல்லா 35 ரன்கள் எடுத்தார். பின்னர் மழை குறுக்கிட்டதால் 11 ஓவர்களில் 91 ரன்கள் எடுக்க வேண்டும் என்று வெஸ்ட் இண்டீசுக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி அதை 9.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆந்த்ரே ரஸ்செல் 35 ரன்கள் (21 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி களத்தில் இருந்தார். எஞ்சிய இரண்டு 20 ஓவர் போட்டிகளும் அமெரிக்காவின் லாடர்ஹில் நகரில் நடக்கிறது. 2–வது 20 ஓவர் போட்டி நாளை மறுதினம் நடக்கிறது.

மேலும் செய்திகள்