கிரிக்கெட்
உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வி, 2 வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை

உலக பேட்மிண்டன் போட்டியில் இரண்டு முறை வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்ற சாதனையை இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனதாக்கினார். #PVSindhu #CarolinaMarin


நான்ஜிங், 


 24–வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த ஆண்டு (2017) இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து தொடர்ச்சியாக 2–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் முன்னேறினார். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து–கரோலினா மரின் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இருவரும் இதுவரை மோதிய 11 போட்டிகளிலில் கரோலினா மரின் 6 முறையும், சிந்து 5 முறையும் தடவையும் வெற்றி கண்டிருந்தனர். இன்றையை ஆட்டத்தில் பிவி சிந்து அபாரம் காட்டுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

 ஆட்டம் தொடங்கியதுமே கரோலினா தன்னுடைய அதிரடியை காட்டினார். பிவி சிந்தும் ஆட்டத்தை அவரிடம் எளிதாக கொடுத்துவிடவில்லை, போராடினார். எப்போதும் போல நேர்த்தியான ஆட்டம் மூலம் சிந்துவின் தவறுகளை தனதாக்கி செட்டை தனதாக்கினார். சிந்து போராடினாலும் செட் கரோலினா வசம் சென்றது. இரண்டாவது ஆட்டத்தில் விறுவிறுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் 11-2 என்ற வகையில் சிந்து பின்தங்கினார். 

ஆட்டத்தை பின்னர் கரோலினா தன்னுடைய வசமே வைத்து இருந்தார் 19-7 என்ற கணக்கில் முன்னிலைப்பெற்ற அவர் அதிரடியான ஆட்டம் மூலம் செட்டை 21-10 என்ற கணக்கில் கைப்பற்றி தங்கப்பதக்கம் வென்றார். இவ்வாண்டும் பிவி சிந்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது முறையாக வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.