கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? 2–வது டெஸ்ட் போட்டி லண்டனில் நாளை துவக்கம்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை துவங்குகிறது.
லண்டன், 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். தோல்வி எதிரொலியாக இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது.