கிரிக்கெட்
டி.என்.பி.எல் கிரிக்கெட்: மதுரைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் 75 ரன்கள் வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மதுரைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திண்டுக்கல்,


தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் குவாலிபையர்-1 திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் களம் இறங்கியது. அதிரடியாக ஆடிய திண்டுக்கல் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது. 

இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய மதுரை அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தாரை வார்க்க துவங்கியது.  19.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த மதுரை அணி 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வென்றது.