கிரிக்கெட்
சச்சினின் உலகத் தர விளையாட்டு அகாடமி!

மும்பையில் உலகத்தர விளையாட்டு அகாடமியை சச்சின் தெண்டுல்கர் அமைக்க உள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், தனது சொந்த ஊரான மும்பையில் ஓர் உலகத்தர விளையாட்டு அகாடமியை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

இது, சச்சின் எப்போதாவது வந்து பார்வையிட்டுப் போகிற ஓர் அகாடமியாக இருக்காது.

சொல்லப்போனால், இங்கு கிரிக்கெட்டுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படாது.

கிரிக்கெட் முதல் ஸ்குவாஷ் வரை, நீச்சல் முதல் பேட்மிண்டன் வரை உலகத் தர வசதியில், உலகத் தர பயிற்சி அளிக்கும் மையமாக இருக்கும்.

இந்த அகாடமிக்காக மாபெரும் திட்டங்களை வைத்திருக்கிற சச்சின் குழு, இதற்குப் பொருத்தமான இடத்தை தீவிரமாகத் தேடி வருகிறது.

இங்கிலாந்து மிடில்செக்ஸை சேர்ந்த குளோபல் அகாடமியுடன் இணைந்து இந்த மெகா முயற்சியில் இறங்கியிருக்கிறார், ‘மாஸ்டர் பிளாஸ்டர்’.

‘தெண்டுல்கர் மிடில்செக்ஸ் குளோபல் அகாடமி’ (டி.எம்.ஜி.ஏ.) எனப்படும் இம்மையம் குறித்து விவரிக்கையிலேயே சச்சினின் குரலில் பெருமிதம் தொனிக்கிறது...

‘‘ஒரு கிரிக்கெட் மைதானமும், அதில் வலைப்பயிற்சி வசதியும் கொண்டதாக மட்டும் இந்த அகாடமி இருக்காது. எல்லா வகை விளையாட்டு வீரர், வீராங்க னைகளும் எல்லா வகை விளையாட்டு களையும் விளையாடுவதற்கான அனைத்து வசதி களையும் கொண்ட பிரம்மாண்ட அகாடமியாக அமையும். கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா போல மிகத் தரமான விளை யாட்டு மையமாக இதை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் திட்டம்.’’

இதன் வசதியிலும் தரத்திலும் எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்பதில் சச்சின் டீம் தீர்மானமாக இருக்கிறதாம்.

‘‘விளையாட்டை நேசிக்கும் நாடு என்பதில் இருந்து, விளையாட்டு தேசமாக இந்தியாவை நாம் மாற்ற வேண்டும். அந்த நோக்கிலான எங்களின் முயற்சிதான், இந்த அகாடமி. இதற்காக நாங்கள் ஓராண்டுக்கும் மேலாகத் திட்டமிட்டு வருகிறோம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவரும் சந்தித்து விவாதிக்கவும், ஓர் ஆரம்பகட்ட முடிவுக்கு வரவுமே பத்து மாதங்களாகிவிட்டன’’ என்கிறார்.

இந்த அகாடமிக்கான தொடக்க விழா, லண்டனிலும் மும்பையிலும் நடைபெறுமாம். லண்டனில் முதலில் தொடக்க விழாவை நடத்திவிட்டு, பின்னர் நவம்பரில் மும்பையில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

‘‘டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடு கள் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் இதுபோன்ற அகாடமிகளை தொடங்கத் திட்டமிட்டிருக்கிறோம்’’ என்று தங்கள் யோசனையைக் கூறுகிறார் சச்சின்.

மும்பையில் இதற்கான பொருத்தமான இடத்தையும், இத்திட்டத்தில் இணைந்து செயல்படக்கூடியவர்களையும் இப்போது தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

‘‘நாங்கள் பல்வேறு விஷயங்களை தற்போது அலசிக்கொண்டிருக்கிறோம். இதுதொடர்பாக நாங்கள் தொடர்புகொண் டவர்கள் எல்லோரிடமும் இருந்து எங்களுக்குச் சாதகமான பதில்கள் வந்து கொண்டிருக்கின்றன. பலரும் ஆர்வத் தோடு முன்வருகிறார்கள். எங்களுக்கு ஒரு பெரிய இடம் தேவைப்படும். அதை மனதில் வைத்து நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கி றோம்’’ என்று சொல்லும் சச்சின், அமையவிருக்கும் அகாடமியில் தானே நேரடியாகப் பயிற்சி அளிப்பேன் என்றும் தெரிவிக்கிறார்.

மற்றவர்கள் பின்பற்றத்தக்க முன்மாதிரியான, நவீன பயிற்சி முறைகளை சச்சினின் அகாடமி மேற்கொள்ளுமாம்.

‘‘அகாடமிக்கான பயிற்சித் திட்டத்தை நாங்கள் மிகக் கவனமாக வடிவமைத்து வருகிறோம். பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங் களுக்குத் தேவையான பயிற்சி யாளர்களையும் நாங்கள் அனுப்புவோம். பொதுவில், விளை யாட்டு வீரர், வீராங் கனை களின் திறமை களை வளர்ப் பதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்’’ என்று விவரித் துக் கொண்டே போகிறார்.

வாருங்கள், வரவேற்கிறோம்.