கிரிக்கெட்
உடல்தகுதி பெற்றார், பும்ரா

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உடல்தகுதி பெற்றார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இடது கை பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் இரு டெஸ்டுகளில் ஆடவில்லை. இந்த நிலையில் அவர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து உடல்தகுதி பெற்று விட்டதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் வாழ்வா-சாவா கட்டத்தில் உள்ள 3-வது டெஸ்டில் பும்ரா களம் இறங்குவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

இதே போல் லண்டன் டெஸ்டில் பேட்டிங் செய்த போது, அஸ்வின், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு வலது கையில் பந்து தாக்கியது. அவர்களும் உடல்தகுதியை எட்டி விட்டனர். லேசான முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ள கேப்டன் விராட் கோலியும் 3-வது டெஸ்டுக்குள் உடல்தகுதியை அடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.