கிரிக்கெட்
ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளராக லால்சந்த் ராஜ்புத் நியமனம்

ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளராக லால்சந்த் ராஜ்புத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஹராரே,

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஜிம்பாப்வே அணி தகுதி பெற தவறியதையடுத்து அந்த அணியின் பயிற்சியாளர் ஹீத் ஸ்டிரிக் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இடைக்கால பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புத் செயல்பட்டார்.

இந்த நிலையில் 56 வயதான ராஜ்புத்தை முழுநேர தலைமை பயிற்சியாளராக நியமித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.