வரதட்சணைக்கேட்டு துன்புறுத்துவதாக வங்காளதேச கிரிக்கெட் வீரர் மீது மனைவி புகார்

வரதட்சணைக்கேட்டு துன்புறுத்துவதாக வங்காளதேச கிரிக்கெட் வீரர் மீது அவரது மனைவி புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-27 08:43 GMT
டாக்கா,  

வங்காளதேச கிரிக்கெட் அணியின் இளம் வீரர் மோசதேக் ஹூசைன் சைகாத்( வயது 22). வரும் செப்டம்பர் 13 ஆம் முதல் 28 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்காளதேச அணியில் மோசதேக் ஹூசைன் சைகாத் இடம் பெற்றுள்ளார். 

இந்த நிலையில், மொசதேக் ஹூசைன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் தொடுத்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் நடைபெற்றதாகவும் தற்போது வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியில் அனுப்பி துன்புறுத்துவதாக, அவரது  மனைவி சர்மின் சமிரா உஷா புகார் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, அங்குள்ள கூடுதல் மாஜிஸ்திரேட்டு நீதிபதி, இந்த புகார் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுள்ளார். இந்தப்புகார் குறித்து, கருத்து கேட்க மோசேதேக் ஹூசைனை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

ஆனால், ஹூசைனின் சகோதரர் மோசாபர் ஹூசைன், இச்சம்பவம் குறித்து கூறும் போது, திருமணானதில் இருந்தே அவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவியதாகவும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சமிரா உஷாவுக்கு மோசேதேக் ஹூசைன் விவகாரத்து கடிதம் வழங்கியதாகவும், ஆனால், திருமண பத்திரத்தில் குறிப்பிட்ட தொகையை விட கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்றும் சமிரா உஷா கேட்டதாகவும், கேட்ட தொகை கிடைக்காததையடுத்து, தவறான புகாரை அளித்துள்ளதாகவும் மோசாபர் ஹூசைன் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்