ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியை வீழ்த்தி இந்திய ‘பி’ அணி சாம்பியன்

நான்கு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஏ–இந்தியா பி அணிகள் மோதின.

Update: 2018-08-29 21:00 GMT

பெங்களூரு, 

நான்கு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஏ–இந்தியா பி அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய ஏ அணி 47.5 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அடுத்து களம் இறங்கிய இந்திய பி அணி 36.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 230 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்திய பி அணியில் மயங்க் அகர்வால் (69 ரன்), சுப்மான் கில் (66 ரன்), கேப்டன் மனிஷ் பாண்டே (73 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

முன்னதாக நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய ஏ அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க ஏ அணியை தோற்கடித்தது. காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும் செய்திகள்