கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் ; 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறி வருகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில் நடந்த 3–வது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் ஸ்டேடியத்தில் இன்று  தொடங்குகியது. ஒரு வார கால ஓய்வுக்கு பிறகு இரு அணி வீரர்களும் புத்துணர்ச்சியுடன் களம் இறங்கி உள்ளனர்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 15 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தவித்து வருகிறது. பூம்ரா தனது முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆட்டத்தில் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரரான ஜென்னிங்ஸ் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து கேப்டன் ரூட் 4 ரன்களில் இஷாந்த் சர்மா ஓவரில் வெளியேறினார். இங்கிலாந்து அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

தொடர்ந்து விளையாடிய  இங்கிலாந்து 57 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பூம்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.