3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: அயர்லாந்துக்கு எதிரான தொடரை வென்றது ஆப்கானிஸ்தான் அணி

அயர்லாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.

Update: 2018-09-01 01:24 GMT
பெல்ஃபாஸ்ட்(அயர்லாந்து),

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடிய டி-20 தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதைதொடர்ந்து நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானும், இரண்டாவது போட்டியில் அயர்லாந்தும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கிய அயர்லாந்து அணி 36.1 ஓவரில் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் கேரி வில்சன் அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், அப்தாப் ஆலம், குலாப்தின் நயிப், மொகமது நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் இஷானுல்லா ஜனாத் சிறப்பாக அடி அரை சதம் எடுத்ததுடன் 57(62) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 23.5 ஓவரிலேயே  2 விக்கெட் இழப்புக்கு  127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. தொடர் நாயகனாக ரஷித் கான் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்