கடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியில் வோக்ஸ், போப் சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் வோக்ஸ், போப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Update: 2018-09-04 22:15 GMT
லண்டன்,    

இந்தியாவுக்கு எதிராக லண்டன் ஓவலில் வருகிற 7-ந்தேதி தொடங்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், ஆலிவர் போப் மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். முதல் 4 டெஸ்டுகளில் வெறும் 130 ரன்கள் மட்டுமே எடுத்த தொடக்க ஆட்டக்காரர் கீடான் ஜென்னிங்சுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி வருமாறு:-

ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், அலஸ்டயர் குக், சாம் குர்ரன், ஜென்னிங்ஸ், ஆலிவர் போப், பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ்.

மேலும் செய்திகள்