ஆசிய கிரிக்கெட் போட்டிக்கு சர்வதேச அந்தஸ்து - ஐ.சி.சி. அனுமதி

ஹாங்காங் அணி பங்கேற்ற போதிலும் ஆசிய கிரிக்கெட் போட்டிக்கு சர்வதேச அந்தஸ்து வழங்கி ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.

Update: 2018-09-09 22:30 GMT
துபாய்,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. ஹாங்காங் மட்டும் தகுதி சுற்றில் விளையாடி அதன் மூலம் ஆசிய போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆனால் ஹாங்காங் அணிக்கு சர்வதேச ஒரு நாள் போட்டி அந்தஸ்து கிடையாது என்பதால் அந்த அணி ஆடும் ஆட்டங்கள் அதிகாரபூர்வமானதாக கணக்கிடப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இது குறித்து தெளிவுப்படுத்தியுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஆசிய போட்டியில் நடக்கும் அனைத்து ஒரு நாள் போட்டிகளுக்கும் சர்வதேச அந்தஸ்து வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்